அன்னுார் : அன்னுார் அருகே சினிமா போல் வாகனத்தில் 'சேசிங்' செய்து மொபைல் போன் திருடர்களை போலீசார் பிடித்தனர்.
2 கி.மீ., துாரம் சேசிங் செய்து, குருக்கிளையம்பாளையத்தில் காரை குறுக்கே நிறுத்தி அவர்களை மடக்கிப்பிடித்தனர்.விசாரணையில், அவர்கள், காரமடை மணிகண்டன், 28, பெள்ளேபாளையம் கணேசன், 36, சிறுமுகை அரவிந்த், 26, என தெரிய வந்தது. மூவரையும் கைது செய்து மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.