ஊட்டியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், கலெக்டர், வனத்துறை அமைச்சர் ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர். அதில், கலெக்டர் அம்ரித், குரும்பர் பழங்குயினர் வரைந்த ஓவியத்தை அளிக்க சென்ற போது, திடீரென தடுமாறி விழ சென்றார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் அவரை பிடித்து நிற்க உதவினர். பின்பு, நினைவு பரிசை வாங்கிய முதல்வர் அவருக்கு தட்டி கொடுத்து அமரச்சொன்னார். தொடர்ந்து, முதல்வர் தனது பேச்சை துவக்கிய போது, படுகர்; தோடர்; கோத்தகர் ஆகியோரின் மொழிகளில், வணக்கம் கூறிய போது மக்கள் கரஒலி எழுப்பினர்.