திருப்பூர் : தமிழக அரசுடன் இணைந்து திருப்பூர் ரோட்டரி பொதுநல அறக்கட்டளை சார்பில், அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கலெக்டர் வினீத் தலைமையில் நடந்த கூட்டத்தில், அமைச்சர் கயல்விழி, மாநகாரட்சி மேயர் தினேஷ்குமார், கமிஷனர் கிராந்திகுமார், எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோரிடம் ரோட்டரி அமைப்பு நிர்வாகிகள், இத்திட்டம் குறித்து விளக்கினர்.மருத்துவக்கல்லுாரி 'டீன்'முருகேசன், ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன், புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பது குறித்து விளக்கினர்.
திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், இரு கட்டங்களாக இம்மையம் அமைக்கப்படும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.