கோவை : கோவையில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அரிசி, கோதுமை பதுக்கி வைத்திருந்த அகமது, 30, இம்தியாஸ், 36, ஆகியோர் பிடிபட்டனர். விசாரணையில், ரேஷன் அரிசி, கோதுமையை அரைத்து மாவாக்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். இருவரையும் கைது செய்த போலீசார், ரைஸ் மில் உரிமையாளர் இன்பு(எ)இம்ரான் என்பவரை தேடி வருகின்றனர்.