ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைக்க ரூ.5.88 கோடி ; திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு பரிந்துரை
Added : மே 23, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


மாவட்டத்தில் கடலுார் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் அரசு மற்றும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனைகளில் தினசரி 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெறுகின்றனர்.



பொது, மகப்பேறு, காது மூக்கு தொண்டை, முடநீக்கியல் பிரிவு, குழந்தைகள் நலன், சித்தா போன்ற பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இவற்றில், மகப்பேறு, முடநீக்கியல் பிரிவுகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றது. இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது.நகர்ப்புற மக்களுக்கு நிகராக, கிராமப்புற மக்களும் எளிதில் இலவச சிகிச்சை பெறும் வகையில், 10 முதல் 15 கிராமங்களை உள்ளடக்கி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டன.அதன்படி, கடலுார் மாவட்டத்தில், 77 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதன் மூலம் கிராமப்புற நோயாளிகள் நகருக்கு வருவது குறைந்துள்ளது.ஆனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள், போதுமான கட்டட வசதிகள் இல்லை. 20 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டடங்கள் பழுதடைந்து உள்ளன.

இதனால், நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். கடந்தாண்டு நவம்பர் மாதம், கருவேப்பிலங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் கணேசன், மாவட்டம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்து, அவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.இதையடுத்து, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா தலைமையில், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் குழுவினர், மாவட்டம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், கட்டடங்கள் பழுது, மின்சாதனங்கள் புதுப்பிப்பு, அடிப்படை வசதிகள் சீரமைப்பு போன்ற பணிகள் குறித்து அறிக்கை தயாரித்தனர்.அதன்படி, 71 ஆரம்ப சுகாதார நிலையங்களை புனரமைக்கவும், மின்சாதனங்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 5 கோடியே 88 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் மூலம் சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, விரைவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சீரமைப்பு பணிகள் துவங்க உள்ளது.

இது குறித்து துணை இயக்குனர் டாக்டர் மீரா கூறுகையில், 'ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்து, 5.88 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு பரிந்துரை செய்து, நிதி ஒதுக்கீடு செய்ததும், பணிகள் விரைந்து துவங்கும்' என்றார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X