காய்கறி, பழம் பதப்படுத்தும் நிலையம்...தயார்! 20 ஆயிரம் கிலோ இருப்பு வைக்கலாம்..
Added : மே 23, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகங்களில், காய்கறி, பழங்கள் பதப்படுத்தும் நிலையம் தயாராகி உள்ளது. இதன் வாயிலாக, 20 ஆயிரம் கிலோ விளைபொருட்களை பதப்படுத்தி, குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பு வைக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 4 லட்சம் ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. இதில், 60 ஆயிரம் ஏக்கரில் காய்கறி, பூ மற்றும் பழங்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், நெல் இருப்பு வைத்து விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல், காய்கறி, பூ மற்றும் பழங்கள் உழவர் சந்தைகளில் இருப்பு வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.உழவர் சந்தைகாஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறுகாவேரிபாக்கம், உத்திரமேரூர், சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் படப்பை, சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் செங்கல்பட்டு, மதுராந்தகம், பல்லாவரம், ஜமீன்ராயப்பேட்டை, கண்ணகி நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி ஆகிய பல பகுதிகளில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.விவசாயிகள் விற்பனைக்கு எடுத்து வரும் விளைப்பொருட்கள் சேதம் ஏற்படுவதோடு, வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, வேளாண் விற்பனை துறை வாயிலாக, தொடர் சங்கிலி மேலாண் திட்டத்தின் வாயிலாக, முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் துவக்கப்பட உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுங்குவார்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் என, இரு இடங்களில் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் துவக்கப்பட உள்ளன. இதில் 20 ஆயிரம் கிலோ காய்கறிகள் சுத்தம் செய்து, குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பு வைக்கலாம் என, வேளாண் துறையினர் தெரிவித்தனர். எதிர்பார்ப்புஇந்த வளர்ச்சி பணிகளை, வேளாண் விற்பனை துறை இயக்குனர் நடராஜன் சமீபத்தில் ஆய்வு செய்துள்ளார்.இந்த நிலையங்களில், விவசாயிகள் கொண்டு வரும் காய்கறி, பூக்கள் மற்றும் பழங்களை சுத்தப்படுத்தி, தரம் பிரித்து உள்ளூர் மற்றும் வெளி நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்ப உள்ளனர். இந்த திட்டத்தின் வாயிலாக, உழவர் உற்பத்தியாளர் குழுவில் இருக்கும் பல தரப்பு விவசாயிகள் பயன்பெறுவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் விற்பனை துணை இயக்குனர் முகமது ரபிக் கூறியதாவது:சுங்குவார்சத்திரம், மதுராந்தகம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், காய்கறி, பழங்கள் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் துவக்கப்பட உள்ளன. இதில் தலா 10 ஆயிரம்

கிலோ விளை பொருட்களை தரம் பிரித்து, குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பு வைத்து விற்பனை செய்யலாம். உழவர் உற்பத்தி நிறுவனம் மற்றும் உழவர் ஆர்வலர் குழுவினர் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.




ஒதுக்கீடு விபரம்

பதப்படுத்தம் நிலையங்கள் இருப்பு அளவு நிதி ஒதுக்கீடுசுங்குவார்சத்திரம் 10 ஆயிரம் கிலோ ரூ.5.60 கோடிமதுராந்தகம் 10 ஆயிரம் கிலோ ரூ.2.70 கோடி




ஒதுக்கீடு விபரம்

பதப்படுத்தம் நிலையங்கள் இருப்பு அளவு நிதி ஒதுக்கீடுசுங்குவார்சத்திரம் 10 ஆயிரம் கிலோ ரூ.5.60 கோடிமதுராந்தகம் 10 ஆயிரம் கிலோ ரூ.2.70 கோடி




 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X