எவை; எதிர்கால வாழ்வை வளமாக்கும் உயர்கல்வி பாட பிரிவுகள் என்ன என விளக்க உள்ளனர். படிக்கும் போதே வளர்க்க வேண்டிய வேலைவாய்ப்பு திறன்கள் என்ன, 'டாப்' கல்வி நிறுவனங்களின் படிப்புகள் என்னென்ன என்பது குறித்து, மாணவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் நிபுணர்கள் ஆலோசனை வழங்குவர்.கல்லுாரிகளில் சேர்ந்த பின், வங்கிகளில் எளிதில் கல்விக் கடன் பெறும் முறை குறித்தும், நிபுணர்கள் வழிகாட்ட உள்ளனர்.
இஸ்ரோ விஞ்ஞானிநாட்டின் முன்னணி கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர், அறிவியல் தொழில்நுட்ப படிப்புகள் குறித்து ஆலோசனை அளிக்கஉள்ளனர்.உயர்கல்வி ஆலோசகர்ஜெயபிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், கல்வி ஆலோசகர்
பிரேமானந்த் சேதுராஜன், தைரோகேர் தொழில்நுட்ப நிறுவனர் வேலுமணி, தொழிலதிபர் குமரவேல், ஆடிட்டர் சேகர்; தொழில் துறை வல்லுனர் செந்தில்ராஜா ஆகியோர், வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவர்களுக்கு ஆலோசனை அளிக்க உள்ளனர்.அனைத்து வகை கலை, அறிவியல் படிப்புகள் குறித்து, கல்வியாளர் ரமேஷ் பிரபா; ஆளில்லா விமானமான 'ட்ரோன்'களின் தேவை குறித்து, அண்ணா பல்கலை பேராசிரியர் செந்தில், வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு தொடர்பாக, சுஜித்குமார், கல்விக் கடன் குறித்து வங்கியாளர் விருத்தாசலம், அரசு வேலைவாய்ப்பு குறித்து நித்யா ஆகியோரும், ஆலோசனை வழங்குவர்.
வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில், தமிழகத்தின் முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என, 80க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் ஒவ்வொரு கல்லுாரிக்கும் நேரில் சென்று பெற வேண்டிய தகவல்களை, ஒரே வளாகத்தில் நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.ஒவ்வொரு அரங்கிலும், உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், தங்கள் நிறுவனத்தில் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், அதற்கான வேலைவாய்ப்புகள், 'அப்ளிகேஷன் முதல் அட்மிஷன்' வரையிலான மாணவர் சேர்க்கை நடைமுறை, கல்வி கட்டணம் ஆகியவை குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மட்டுமின்றி, உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளை பெற, www.kalvimalar.com/ என்ற இணையதளத்திலும், 91505 74441 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணிலும், தங்களின் பெயர் மற்றும் மாவட்ட விபரங்களுடன், மாணவர்கள் பதிவு செய்யலாம்.காலை மற்றும் மாலையில், உயர்கல்வி நிபுணர்கள் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில், மாணவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பவர்களில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு லேப்டாப், டேப்லெட் மற்றும் வாட்ச் பரிசாக வழங்கப்படும்.
'தினமலர்' நாளிதழுடன், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து, இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. முக்கிய 'பவர்டு பை' பங்களிப்பாளராக, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.வேல்ஸ் நிகர்நிலை பல்கலை, டாட் ஸ்கூல் ஆப் டிசைன், பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் நிகர்நிலை பல்கலை, சென்னை ஷிவ் நாடார் பல்கலை, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து, வழிகாட்டி நிகழ்ச்சியை வழங்குகின்றன.