கர்ப்பிணியிடம் செயின் பறிப்புவாலிபர் போலீசில் ஒப்படைப்பு | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
கர்ப்பிணியிடம் செயின் பறிப்புவாலிபர் போலீசில் ஒப்படைப்பு
Added : மே 23, 2022 | |
Advertisement
 



புதுச்சேரி,-கோவிந்தசாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட கர்ப்பிணியிடம் செயின் பறித்த வாலிபரை பொதுமக்கள் துரத்திப் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.புதுச்சேரி கோவிந்தசாலை புது நகரை சேர்ந்தவர் மோகன். இவரது வீட்டில், உறவுக்கார பெண் அபி, 28; என்பவர் கடந்த ஒரு மாதமாக தங்கி உள்ளார் கர்ப்பிணியான அபி, நேற்று இரவு 10:30 மணி அளவில், வீட்டின் எதிரே சாலையில் நடை பயிற்சி சென்றார்.அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், அபியின் கழுத்திலிருந்த ஒரு சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், அந்த வாலிபரை துரத்தி சென்றனர்.ஆட்டுப்பட்டி பகுதியில் உள்ள வாய்க்கால் ஓரம் ஓடிய அந்த நபர், வாய்க்காலில் தவறி விழுந்தார். துரத்திச் சென்ற மக்கள் அவரை மீட்டு தர்மஅடி கொடுத்து, ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினார்.அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததுடன், இந்தி மொழியில் பேசினார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X