திண்டிவனம்,-முன்விரோத்தில் கார் டிரைவரை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர். வந்தவாசியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் குமார், 42; இவர் திண்டிவனத்தில், தனியார் டிராவல்சில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்.இவர் நேற்று முன்தினம் இரவு, டிராவல்ஸ் அலுவலகத்தில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜா, 46; என்பவர், முன்விரோதம் காரணமாக, டிரைவர் குமாரை ஆபாசமாக திட்டி, பேனா கத்தியால் கை மற்றும் தோள்பட்டையில் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.அதில் படுகாயமடைந்த குமார், திண்டிவனம் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய ராஜாவை தேடி வருகின்றனர்.