திருப்பூர்:அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 12வது தெற்கு ஒன்றிய மாநாடு, முதலிபாளையம் சிட்கோ பகுதியில் நடந்தது.ஒன்றியப் பகுதியிலிருந்து மாதர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநாடு துவக்கமாக சிட்கோ பஸ் ஸ்டாப்பில் இருந்து பெண்கள் பங்கேற்ற ஊர்வலத்தை கவுன்சிலர் மணிமேகலை துவங்கி வைத்தார். இதில், தப்பாட்டம், சிலம்பாட்டம் நடத்தியவாறு பெண்கள் கலந்து கொண்டனர்.
மாநாடு கொடியை அங்குலட்சுமி ஏற்றினார். ஒன்றிய தலைவர் நாகராணி தலைமை வகித்தார். ஜானகி வரவேற்றார்.காந்திமதி, பேபி, ஜானகி, தேவி, சாயிராபானு, இந்திராணி முன்னிலை வகித்தனர்.பாரதி தீர்மானம் வாசித்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் பவித்ராதேவி பேசினார். ஒன்றிய செயலாளர் லட்சுமி அறிக்கை வாசித்தார். வரவு செலவு அறிக்கையை தனபாக்கியம் வாசித்தார்.மாநிலக்குழு உறுப்பினர் மூர்த்தி, மாதர் சங்க மாநில துணை செயலாளர் சாவித்திரி, மத்தியக்குழு உறுப்பினர் பிரமிளா உள்ளிட்டோர் பேசினர். இதில் மாதர் சங்கத்தினர் திரளாககலந்து கொண்டனர்.