திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, 8வது வார்டுக்கு உட்பட்ட பி.என்., ரோடு மும்மூர்த்தி நகர் கிழக்கில் வீட்டு முன்பு இருந்த, இரு மரங்களை ஒருவர், எவ்வித அனுமதியும் இல்லாமல் வெட்டியுள்ளார். மின்ஒயர்கள் மீது உரசுவதாக கூறி, அதிகாரிகளிடம் முறையாக அனுமதி வாங்காமல் வீட்டின் உரிமையாளர் மரத்தை வெட்டியுள்ளார். ஒரு மரத்தை முழுவதுமாக வெட்டியும், மற்றொரு மரத்தை கிளைகளை வெட்டி சாய்த்துள்ளதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.கடந்த, இரு மாதம் முன்பு, இதேபோன்று, மூன்று மரங்களுக்கு 'ஆசிட்' ஊற்றியுள்ளனர். இதன் காரணமாக, மூன்று மரமும் பட்டு போனது.