கருத்தரங்கம்
காரியாபட்டி:
காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல், தகவல்
தொடர்புத் துறை, இந்திய பொறியாளர் கழக அமைப்பு இணைந்து '5ஜி
பயன்பாடுகளுக்கான ஸ்மார்ட் ஆண்டனா ' என்ற தலைப்பில் ஒரு நாள்
கருத்தரங்கம் நடத்தியது. நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் சீனி முகைதீன், சீனி முஹம்மது அலியார் மரைக்காயர்,
நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். துறை தலைவர்
மெர்லின் வரவேற்றார். முதல்வர் செந்தில்குமார், முதுகலை
துறைத்தலைவர் தமிழ்ச்செல்வி, ஐ.இ.ஐ., எம்.எல்.சி., தலைவர்
சிவசுப்பிரமணியன் பேசினர். பேராசிரியர் பாரிஜாதம் நன்றி
கூறினார். பேராசிரியர்கள் இந்திரா, தீபா, அப்துல் சிக்கந்தர்,
பாண்டிமாதேவி, கணியமுதன், முருகேஸ்வரி, பாத்து நிஷா, மாணவர்கள்
கலந்து கொண்டனர்.
கல்லுாரியில் போட்டிகள்
சிவகாசி: அய்ய
நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் மாநில அளவிலான
கல்லுாரிகளுக்கு இடையேயான சங்கமம் மைக்ரோப்ஸ் 2022 என்ற
தலைப்பில் போட்டிகள் நடந்தன. முதல்வர் அசோக் தலைமை வகித்தார். 7
கல்லுாரிகளைச் சேர்ந்த 91 மாணவர்கள் பங்கேற்றனர். முதல் பரிசை
கே.ஆர்., கல்லுாரி மாணவர்கள் பெற்றனர். ஏற்பாடுகளை
நுண்ணுயிரியல் துறை தலைவர் பொன்மாணிக்கம் செய்திருந்தார். உதவி
பேராசிரியர் ஜான்வில்சன் நன்றி கூறினார்.
இணைய வழி கருத்தரங்கம்
விருதுநகர்:
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் சுயநிதி
வணிகவியல் துறை, மதுரை மங்கையர்கரசி கல்லுாரி வணிக
நிர்வாகவியல் துறை இணைந்து "ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதும் திறன்,
ஸ்கோபஸ் இதழ்களில் ஆய்வு கட்டுரைகள் வெளியிடும் விதம்" எனும்
தலைப்பில் தேசிய இணைய வழி கருத்தரங்கம் நடந்தது. துறை தலைவர்
செல்வநாதன் வரவேற்றார். முதல்வர் சுந்தரபாண்டியன் தலைமை
வகித்தார். சுயநிதி பாட பிரிவு ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன்,
மங்கையர்கரசி கல்லுாரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர்
சாந்தகுமாரி வாழ்த்தி பேசினர். புதுச்சேரி பல்கலை வணிகவியல்
பேராசரியர் அருள் முருகன் பேசினார். ஒருங்கிணைப்பாளர் அனிதா நன்றி
கூறினார். ஏற்பாடுகளை சுயநிதி வணிகவியல் துறை பேராசிரியர்கள்
பாலாஜி, கலைசிகாமணி, ராஜ்மோகன், சிவசுந்தரி, சரவணன் செய்தனர்.