நீர்நிலைகள், கரைகளில் 2 ஆயிரம் பனை விதைகள் பசுமை கிராம இளைஞர்கள் புது முயற்சி
Added : மே 23, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

காரியாபட்டி:தாவரங்களில் மிக முக்கியமானது பனைமரம். இயற்கையில் அற்புத கொடை ஆகும். பனை மரங்கள் இருக்கும் இடங்களில் மண்வளம் தரமாக இருக்கும். கோடை வெயிலுக்கு உடல் சூட்டை தணிக்க நுங்கு, கூரைக்கு பனை ஓலை, வேலிக்கம்பு, உத்திரம் என பல வகைகளில் உதவுகிறது.
தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் ஒன்றுபட்டது என்பதற்கு உதாரணம், ஓலைச்சுவடிகள் எழுதும் பழக்கத்தை கொண்டிருந்தவர்கள் தான் நமது முன்னோர்கள். தற்போது மெல்ல அழிந்து வரும் தாவரங்களில் ஒன்றாக பனை மரம் இருக்கிறது. உண்ண உணவு, இருக்க இருப்பிடம் இருந்தால் போதும் என்கிற நினைப்பை தாண்டி ஒவ்வொரு மனிதரும் மரம் வளர்ப்பை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பனை மரங்களின் அழிவு, நம் அனைத்து வளங்களுக்குமான அழிவு என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒரு கிணற்றை சுற்றி 5 பனை மரங்கள் இருந்தால் அந்தக் கிணற்றில் நீர் வற்றாது. ஒரு பனைமரம் ஆயிரம் அடிக்குக் கீழ் உள்ள ஈரப்பதத்தை கூட உறிஞ்சி வாழக்கூடிய தன்மை கொண்டது என்றால் அதனுடைய மகத்துவத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் பனை விதைகளை நடவேண்டும் என்கிற விழிப்புணர்வு தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் காரியாபட்டி ஆவியூரில் பசுமை கிராமம் என்கிற அமைப்பை ஏற்படுத்திய இளைஞர்கள் ஒன்றுகூடி, நீர்நிலைகள், ஊர் பொது இடங்களிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
''தென்னையை வைத்தவன் தின்னுட்டு சாவான், பனையை வைத்தவன் பார்த்துவிட்டு சாவான்'' என்பது பழமொழி. வைத்தவனுக்கு பயன்படா விட்டாலும், வருங்கால சந்ததியினருக்கு பயனுள்ள பொக்கிஷமாக பனை மரங்கள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வீணாவதை விருட்சமாக்கினோம்
சமூக சேவை செய்வதில் ஈடுபாடு உண்டு. பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வந்தோம். அழிந்துவரும் பனைமரங்கள் குறித்து யோசித்தோம். பசுமை கிராமம் என்கிற அமைப்பை ஏற்படுத்தி, அவரவர் விருப்பப்படும் நிதியை அன்பளிப்பாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். ஓரளவிற்கு நிதி சேர்ந்தது. மதுரை அரசரடி வெள்ளையம்மாள் கோயிலில் உள்ள பனை மரங்களின் விதைகள் வீணாக கொட்டப்படுவதை அறிந்து, அதனை சேகரித்து ஆவியூர் உள்ள நீர் நிலைகள், பொது இடங்கள் என, இதுவரை 2 ஆயிரம் பனை விதைகள் நட்டோம். நன்கு வளர்ந்து வருவதைக் கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது.
- சத்தியமூர்த்தி, சமூக ஆர்வலர், காரியாபட்டி.

பசுமை கிராமமாக மாற்ற வேண்டும்
எங்கள் கிராமத்தை சுற்றி ஆலமரம், இச்சி மரம், பூவரசு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை, கோயில் வளாகங்கள் பொது இடங்களில் நட்டு வைத்து, பராமரித்து வருகிறோம். தொடர்ந்து பனை விதைகளை நடவேண்டும். அதனுடைய பலன்கள் வருங்கால சந்ததியினருக்கு பயன்படவேண்டும் என்கிற அடிப்படையில் பனை விதைகளை நட்டு வருகிறோம். மாதம் ஒருமுறை பசுமை கிராமம் இளைஞர்கள் ஒன்றுகூடி முள் வேலி அமைப்பது, மரக்கன்றுகள் நடுவது என தொடர்ந்து பணிகளை செய்து வருகிறோம். பனை மரங்களில் மூலம் முன்மாதிரி பசுமை கிராமமாக ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
- அன்பழகன், சமூக ஆர்வலர், காரியாபட்டி.


 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X