உடுமலை:உடுமலை நகராட்சியில், நடந்த 'இ-வேஸ்ட்' சேகரிக்கும் சிறப்பு முகாமில், 1.5 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டது.உடுமலை நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்டரானிக்ஸ் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் பயன்படுத்தாமல் வீணாக உள்ள மின்சாதன பொருட்களான, லைட், பிரிட்ஜ், ஏ.சி., மொபைல் போன் பாகங்கள், பேட்டரி, பல்பு, 'சிடி' சி.எப்.எல். பல்பு, 'டிவி' மிக்சி, பேன், வாஷிங் மிஷின், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் உள்ளிட்ட மின்னணு கழிவுகள் பொது இடங்களில் வெளியேற்றப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.இதனையடுத்து, இவற்றை சேகரிக்கும் சிறப்பு முகாம், நேற்று உடுமலை நகராட்சியில் நடந்தது. நகராட்சி தலைவர் மத்தீன், கமிஷனர் சத்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இம்முகாமில், 1.5 டன் மின்னணு கழிவுகளை பொதுமக்கள் கொண்டு வந்து வழங்கினர்.மக்கள் வீணாக உள்ள மின்னணு கழிவுகளை, பஸ் ஸ்டாண்ட் சுகாதார வளாகம், சர்தார் வீதி சுகாதார அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.