திருப்பத்துார்: திருப்பத்துாரிலிருந்து, ஆந்திரா மற்றும் பெங்களூருக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக, குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருப்பத்துார் அடுத்த சோமநாயக்கன்பட்டி, ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள புதரில், 35 மூட்டைகளில், 2,000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.அதை கைப்பற்றிய போலீசார், வழக்கு பதிந்து, ரேஷன் அரிசி பதுக்கல்காரர்களை தேடி வருகின்றனர்.