தனியார் நிலம் எடுப்பது இனி வெகு சிரமம் : மாற்று வழி தேடும் வீட்டு வசதி வாரியம்
Added : மே 23, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை : தனியார் பட்டா நிலத்தை கையகப்படுத்துவது சிரமம் என்பதால் தனியாருடன் இணைந்து வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்துவது என்று வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்கப்பட்ட, 1961ம் ஆண்டு முதல் பொருளாதாரத்தில் பின் தங்கியோர், குறைந்த வருவாய் பிரிவினருக்கு வீடுகள் கட்டித்தரும் பணியை மேற்கொண்டுள்ளது. இதுவரை செயல்படுத்திய 400க்கும் மேற்பட்ட திட்டங்களின் வாயிலாக, 4 லட்சத்து 31 ஆயிரம் குடும்பத்தினர் பயன் பெற்றுள்ளனர்.வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பட்டா நிலத்தை வாரியம் கையகப்படுத்தியது.
இதை எதிர்த்தும், கூடுதல் இழப்பீடு கோரியும் தொடரப்பட்ட வழக்குகளால், வாரியத்துக்கும், பயனாளிகளுக்கும் சிக்கல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.இதனால், வீடு, மனை வாங்கியோர், நிலத்தை இழந்த உரிமையாளர்கள், வாரிய அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்த பிரச்னைகளால், இனி தனியார் பட்டா நிலத்தை கையகப்படுத்தி, வீட்டு வசதி திட்டம் செயல்படுத்துவது சிரமம் என்ற நிலைக்கு வீட்டு வசதி வாரியம் வந்து விட்டது.வரும் காலங்களில் தனியாருடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்துவது என்றும் வாரியம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
வழக்குகள் நிறைய தொடரப்படுவதால், வீட்டு வசதி திட்டங்களுக்காக தனியார் பட்டா நிலம் கையகப்படுத்துவது பெரும் சிரமம் ஆகி விட்டது. இதனால் புதிய திட்டங்களை செயல்படுத்தும் வாரியத்தின் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. நிலம் எடுப்பதில் பாதிக்கப்படுவோருக்கு நியாயமான இழப்பீடு தர வேண்டும் என்ற 2013ம் ஆண்டு சட்டம் காரணமாக, நிலம் எடுப்பதற்கு மாற்று வழிமுறைகளை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
விரைவாகவும், விலை குறைவாகவும், அச்சுறுத்தல் இல்லாத வகையிலும், அனைவரும் ஏற்கக்கூடியதாகவும், வழக்கு விவகாரங்கள் ஏற்படாத வகையிலும் நிலம் பெறுவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.வாய்ப்புள்ள இடங்களில் மட்டும் பழைய முறைப்படி நிலம் எடுக்கவும், மற்ற இடங்களில் தனியார் நில உரிமையாளர்களுடன் இணைந்து (பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் - பிபிபி) திட்டம் செயல்படுத்தலாம் என்றும், வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குனர் செய்துள்ள பரிந்துரை ஏற்று, அரசின் முதன்மை செயலாளர் ஹித்தேஷ் குமார் மக்வானா ஆணை பிறப்பித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X