வாடகை வீட்டில் விபசாரம் மூவர் கைது; 2 அழகிகள் மீட்பு
Added : மே 23, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



புதுச்சேரி : சாரம் அருகே, அப்பார்மென்டில் வீடு வாடகை எடுத்து விபசாரத் தொழில் நடத்திய மூவரை போலீசார் கைது செய்து, 2 அழகிகளை மீட்டனர்.



புதுச்சேரி புதுசாரம், ஞானப்பிரகாசம் நகர் 6வது குறுக்குத் தெருவில் அப்பார்ட்மென்ட் உள்ளது. இங்கு 4வது மாடியை ஒரு தம்பதி, வாடகை எடுத்துள்ளனர். அந்த வீட்டில் இளம்பெண்கள் இருப்பதாகவும், அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக தன்வந்திரி நகர் போலீசாருக்கு புகார்கள் சென்றது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அந்த வீட்டில் சோதனை செய்தனர்.

அங்கு இரண்டு இளம்பெண்கள் இருப்பதும், அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்த அழைத்து வந்ததும் தெரிய வந்தது.விசாரணையில், பாகூர் மாரியம்மன் நகரை சேர்ந்த நாகப்பன், 39; அவரது மனைவி ஷர்மிளா, 39; வீட்டை வாடகைக்கு எடுத்து, விபசார தொழில் நடத்துவது தெரிந்தது. நெல்லித்தோப்பு மாரியம்மன் நகரை சேர்ந்த ரத்தினசபாபதி மனைவி மாரியம்மாள், 52; என்பவரை அழைத்து வந்து, மாமியார் என பொய் கூறி, வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். மூவரையும் கைது செய்த போலீசார், இரண்டு அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

காரைக்கால்
காரைக்கால், நெடுங்காடு வடமட்டம் முக்கூட்டு ஆலமரம் பகுதியில் உள்ள குடிசை வீட்டில் விபசார தொழில் நடைபெற்று வருவதாக, நெடுங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், நேற்று முன்தினம் இரவு சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் அந்த குடிசை வீட்டில் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு விபசார தொழிலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த, 39 மற்றும் 42 வயது உடைய இரு பெண்களை கைது செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X