செய்திகள் சில வரிகளில் ஈரோடு
Added : மே 23, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

நெடுஞ்சாலைகளில் ஆய்வு
தாராபுரம், மே 23-
தாராபுரம் அருகே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை செயல்படுத்தி வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தாராபுரம் கோட்டம், மூலனுார், ஈரோடு சாலை மேம்பாடு பணிகளை, நெடுஞ்சாலைத்துறை உள் தணிக்கை குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர். சேலம் திட்ட கோட்ட பொறியாளர் வத்ஸலா வித்தியானந்தி, தாராபுரம் கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர்.
கலை பண்பாட்டு மைய விழா
தாராபுரம், மே 23-
கலை பண்பாட்டு மைய துவக்க விழாவையொட்டி, தாராபுரத்தில் கலைநிகழ்ச்சி நடந்தது.
தாராபுரத்தில், கலை யாழினி கலை, பண்பாட்டு மையத் துவக்க விழா, நேற்று நடந்தது. நாட்டுப்புறக் கலைஞர் தாராபுரம் கலாராணி தலைமை வகித்தார். கோவை அரசு இசை கல்லுாரி முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
மண்டல கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் ஹேமநாதன், மாணவ-மாணவியரை வாழ்த்தி பேசினார். இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திரைப்பட இயக்குனர் புகழ் நன்றி கூறினார்.
கலை பண்பாட்டு துறை மண்டல உதவி இயக்குனர் ஹேமநாதன் கூறுகையில், ''நாட்டுப்புற கலைஞர் நல வாரிய உறுப்பினர் குழந்தைகளுக்கு, கல்வி மற்றும் திருமண உதவித்தொகை, ஓய்வூதியம் வழங்கப்படு கிறது. மாவட்ட, மாநில அளவிலும்,
வெளிநாடுகளிலும் நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது,'' என்றார்.

பஞ்சமூர்த்தி வீதியுலா
குன்னத்துார், மே 23-
திருப்பூர் மாவட்டம், குன்னத்துாரில் பிரசித்தி பெற்ற பொன்காளியம்மன் கோவிலில் கடந்த, 19ம் தேதி, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினர். நேற்று முன்தினம் இரவு, அலங்கார முத்து பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். நேற்றிரவு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடந்தது. இன்று காலை மஞ்சள் நீர் உற்சவம், நாளை மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
ஜமாபந்தி நாளை துவக்கம்
தாராபுரம், மே 23-
தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில், ஜமாபந்தி நாளை துவங்குகிறது.
நடப்பாண்டுக்கான ஜமாபந்தி, தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் நாளை துவங்கி, ஜூன், 2ம் தேதி வரை நடக்கிறது.
மே 24ல், சித்ராவுத்தன்பாளையம் உள்வட்டம்; மே 25ல், அலங்கியம் உள்வட்டம்; மே 26ல் மூலனுார் உள்வட்டம்; மே 27ல் கன்னிவாடி உள்வட்டம் ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி நடக்கிறது.
இதேபோல் மே 31ல் குண்டடம் உள்வட்டம்; ஜூன் 1ல் பொன்னாபுரம் உள்வட்டம்; ஜூன் 2ல் சங்கரண்டாம்பாளையம் உள்வட்டம் பகுதிகளுக்கு நடக்கிறது. மக்கள், தங்களது குறைகள் குறித்த மனுக்களை அளித்து பயன் பெறலாம்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X