நாமக்கல் அருகே எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், அலுவலக அறை, வட்டார சுகாதார அலுவலர் அறை, கணினி அறை, ஆய்வகம், நோயாளிகள் காத்திருப்பு அறை ஆகியவற்றை உள்ளடக்கிய, வட்டார பொதுசுகாதார கட்டடம் அமைக்கும் பணி துவக்கப்பட்டது. எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 7.52 லட்சம் ரூபாய் மதிப்பில், எர்ணாபுரம் செங்கோடம்பாளையம் அருந்ததியர் காலனியில், கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி துவங்கப்பட்டது.
நாமக்கல் அருகே மாரப்பநாயக்கன்பட்டி ஆரோக்யா நகரில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைத்து, பைப் லைன் அமைக்கும் பணி, 23.75 லட்சம் ரூபாய் மதிப்பில், மாரப்பநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டும் பணி என, மொத்தம், 91.27 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய திட்டப்பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. எம்.பி., ராஜேஷ்குமார் தலைமை வகித்து, புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இதில், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், பி.டி.ஓ., அருளாளன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.