அக்கம் பக்கம் ஈரோடு
Added : மே 23, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சி.ஐ.டி.யு., போக்குவரத்து
தொழிலாளர் ஆலோசனை
ஈரோடு, மே 23-
சி.ஐ.டி.யு., போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில், ஈரோட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஈரோடு மாவட்ட சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க தலைவர் செல்வராஜ், துணை தலைவர் கந்தசாமி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் பேசினர்.
மோட்டார் வாகன தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும், 2019 மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும். தமிழக அரசு உயர்த்தப்பட்ட ஆர்.டி.ஓ. அலுவலக கட்டண உயர்வுகளை நிறுத்தி வைக்க வேண்டும். வாகன ஓட்டுனர்களுக்கு தெரியாமலேயே, ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அரசு போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் மாரப்பன், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாரிமுத்து, குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முருகானந்தம் நன்றி கூறினார்.
பட்டதாரி இளம்பெண்
ஈரோட்டில் விபரீத முடிவு
ஈரோடு, மே 23-
ஈரோடு, கனிராவுத்தர் குளம், காந்தி நகர், மாயவர் கோவில் வீதியை சேர்ந்த, ராமசாமி மகள் மெய் நிவேதா, 24, பொறியியல் பட்டதாரி. திருமணம் ஆகவில்லை. கோவையில் ஒரு டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். உடல் நிலை சரியில்லாததால், 10 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. நேற்று வயிற்று வலி அதிகமானதால், தாய் பாக்கியம்மாளை மருந்துக் கடைக்கு அனுப்பி வைத்தார்.
வயிற்று வலி தாங்க முடியாததால், படுக்கையறை மின் விசிறியில் துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, படியூர் தெற்குபாளையத்தை சேர்ந்த நந்தகோபால் மகள் கோமதி, 17; முள்ளிபுரம் அரசு கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர், துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மதுவிலக்கு போலீசில்
சிக்கிய வாகனங்கள் ஏலம்
ஈரோடு, மே 23-
ஈரோட்டில், மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, 51
டூ-வீலர்கள், எட்டு நான்கு சக்கர வாகனங்கள் என, 59 வாகனங்கள், ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில், வரும், 28ம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது. வாகனங்களை, 27ம் தேதி காலை முதல், மாலை, 5:௦௦ மணி வரை மக்கள் பார்வையிடலாம். டூவீலருக்கு, 2,௦௦௦ ரூபாய், நான்கு சக்கர வாகனத்துக்கு, 5,௦௦௦ ரூபாய் முன் பணமாக ஆயுதப்படை வளாகத்தில், 27ம் தேதி மாலை அல்லது 28ம் தேதி காலை, 10:௦௦ மணிக்குள் செலுத்தி ரசீது பெறவேண்டும். அப்போது தான் ஏலத்தில் பங்கேற்க முடியும். ஏலம் எடுத்தவுடன் தொகையை முழுமையாக, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். விபரங்களுக்கு, ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகம், 83000-37067 மற்றும் 99424-02732, 99760-57118 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X