அக்கம் பக்கம் சேலம்
Added : மே 23, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

விபத்தில் பெண் பலி
கார் டிரைவருக்கு வலை
சங்ககிரி, மே 23-
திருப்பூரை சேர்ந்த, கூலித்தொழிலாளி கண்ணன் மகன் விஜய், 21. தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு மனைவி சித்ரா, 24. இருவரும், திருப்பூரில் உள்ள கார்மென்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். விஜய், பெரம்பலுாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல, நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து, 'யமஹா' பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது பென்னாகரம் செல்ல, சேலத்தில் இறங்கிக்கொள்ள நினைத்து, சித்ரா, விஜயுடன் வந்துள்ளார். மதியம், 2:00 மணிக்கு, சங்ககிரி, குப்பனுார் பைபாஸில் சென்றபோது, பொள்ளாச்சியை சேர்ந்த கிறிஸ்டி பிரகாஷ்ராஜ், 56, ஓட்டிவந்த, 'சான்ட்ரோ' கார், பைக் மீது மோதியது. அதில், சித்ரா படுகாயம் அடைந்து, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். சங்ககிரி போலீசார் வழக்குப்பதிந்து, கிறிஸ்டி பிரகாஷ்ராஜை தேடுகின்றனர்.
தி.மு.க., - பா.ஜ., மோதல்
மருத்துவமனையில் 5 பேர்
நங்கவள்ளி, மே 23-
சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம், 9வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் பரமேஸ்வரி, 58. இவரது மகன் குமார், 32. பா.ஜ., நங்கவள்ளி ஒன்றிய பொதுச்செயலர். இவர், நேற்று நங்கவள்ளி பஸ் ஸ்டாண்டில், தி.மு.க., நகர செயலர் வெங்கடாசலம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். நங்கவள்ளி போலீசார், தகராறில் ஈடுபட்டவர்களை விலக்கி அனுப்பினர். இதில் காயம் அடைந்த குமார், அவரது தம்பி இளங்கோ, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தி.மு.க., தரப்பில், 3 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு போலீசாருக்கும் அடி விழுந்துள்ளதாக புகார் எழுந்தது. நங்கவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவால்
குடும்பத்தில் 3 பேர் மீது வழக்கு
சேலம், மே 23-
சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் சுப்ரமணியன், 60. இவரது சகோதரர் சத்தியநாராயணன், சில ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி புஷ்பாதேவி, 42, உள்ளிட்டோர், சுப்ரமணியன் வசித்த வீட்டுக்கு உரிமை கோரி, நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. 2021 ஜூலை, புஷ்பாதேவி, அவரது மகன் ராகவேந்திரன், 22, மகள் சத்னாதேவி, 19, ஆகியோர், சுப்ரமணியம் வீட்டின் பூட்டை உடைத்து, 'டாபர்மேன்' நாய், சில பொருட்களை எடுத்துச்சென்றனர். சுப்ரமணியன் புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண்: 3 மாஜிஸ்திரேட் அன்பு, வழக்குப்பதிய உத்தரவிட்டார். ஒரே குடும்பத்தில், ௩ பேர் மீதும், நேற்று முன்தினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X