யுடியூபரை கண்டித்து போராட்டம்: சிதம்பரத்தில் குவிந்த சிவனடியார்கள்
Added : மே 23, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சிதம்பரம்: நடராஜப்பெருமானையும், தில்லை காளியையும் அவதூறாக பேசிய யுடியூபர் விஜயை கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரத்தில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜப் பெருமானையும், தில்லைகாளியையும் அவதூறாக பேசிய யுடியூபர் மைனர் விஜயை கைது செய்ய வலியுறுத்தி கடந்த பல மாதங்களாக தமிழகம், புதுச்சேரியில் ஆன்மீக பக்தர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனால் இதுவரை தமிழக அரசு அவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், அனைத்து சிவனடியார்கள் ஒன்றிணைப்பு குழு சார்பில் சிதம்பரத்தில் இன்று (மே 23) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் சிவதாமோதரன் சுவாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் நடராஜன் சுவாமிகள், வாதவூரடிகள் சுவாமிகள், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில செயலாளர் ஞானகுரு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத், இந்து மக்கள் தமிழர் கட்சி ராம.ரவிக்குமார், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்கின்றனர்.

போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் ஏராளமாக வந்துள்ள சிவனடியார்கள் 10க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் தங்கியுள்ளனர். சிதம்பரத்தில் எங்கு பார்த்தாலும் சிவனடியார்கள் கூட்டம் அலைமோதுகிறது. பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடராஜர் கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் குவிந்து தேவாரம், திருவாசகம் பாடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - Mangaf,குவைத்
25-மே-202214:37:07 IST Report Abuse
balakrishnan ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும் .
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
23-மே-202220:59:41 IST Report Abuse
naadodi மைனர் விஜய்க்கு சிவனடியார்களும் இந்துக்களும் நன்றி செலுத்த வேண்டும். இல்லையேல் இவ்வளவு ஒற்றுமை வருமா? பெரியார் உடைத்ததால் தான் பிள்ளையார் சிலைகள் பெருகின. அதனைப் போல்தான் இதுவும். காய்க்கும் மரம் கல்லடி படும்.
Rate this:
Cancel
Sivaraj - Aruvankadu ,இந்தியா
23-மே-202219:42:33 IST Report Abuse
Sivaraj திராவிட மாடல் கொடி கட்டிப் பறக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X