சென்னை : சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு சி.டி.எச்., சாலை பகுதி யைச் சேர்ந்தவர் துளசிராம். இவரது மனைவி கீதா. இவர்களின் இளைய மகன் சரண், 18.கடந்த 21ம் தேதி, நண்பரின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, அன்று மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, போலிவாக்கம் அருகே வேன் மோதி, சரண் கீழே விழுந்தார்.இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின், இரண்டு கண்கள், இதயம், கல்லீரல், இதய வால்வுகள், இரு சிறுநீரகங்கள், தோல் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.இந்த உடல் உறுப்புகள், தகுதியான உள்நாட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளன.பிரேத பரிசோதனைக்குப் பின், சரணின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.