பின் இருக்கை பயணியருக்கும்' ஹெல்மெட்' கட்டாயம்
Added : மே 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


சென்னை : ''இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். பெண்கள், குழந்தைகளும் கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்,'' என, சென்னை மாநகர போலீசின் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் கூறினார். தமிழகத்தில், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என்ற உத்தரவு, 2015, ஜூலை, 1ல் இருந்து அமல்படுத்தப்பட்டது.

எனினும், இரு சக்கர வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிவதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். அதே போல், பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும் 'ஹெல்மெட்' அணிவது கிடையாது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் அலட்சியத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என, சில தினங்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்தனர். இதுபற்றி, 23ம் தேதியில் இருந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்தனர். அதன்படி, சென்னை முழுதும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வேப்பேரியில், போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதை, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் ஆய்வு செய்தார்.பின், அவர் அளித்த பேட்டி:இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என, பல முறை அறிவித்துள்ளோம். 70 சதவீத இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிகின்றனர். பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் அணிவது இல்லை.சமீபத்தில், சென்னையில் நடந்த சாலை விபத்துகள் குறித்து ஆய்வு செய்தோம். அப்போது, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர்களே, அதிகளவில் உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்துள்ளனர்.இதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்காகவே, ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என, வலியுறுத்துகிறோம். பொது மக்களை சிரமப்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை. ஹெல்மெட் தொடர்பாக, ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை என்ற நிலை ஏற்படுமானால் அதைவிட மகிழ்ச்சி வேறொன்றும் இல்லை.

பெண்கள், குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதற்கு சட்டத்தில் இடமில்லை. ஒரு நபர் தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் விதிமீறலில் ஈடுபடுவார் என்றால், அவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய, போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்படும். வாகன சோதனையின் போது, மரியாதைக்குறைவாக நடந்து கொள்ளக்கூடாது என, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களை கண்காணிக்க, சட்டையில், சிறிய அளவிலான கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

3,926 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் நேற்று மாலை 6:00 மணி வரை போலீசார் நடத்திய சிறப்பு வாகன சோதனையில், 'ஹெல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டிய, 1,903 பேர்; பின் இருக்கையில் அமர்ந்து சென்ற, 2,023 என, மொத்தம், 3,926 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்தனர்.




 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X