போலீஸ் வாகனம் மோதி 2 பேர் காயம்; சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு | கடலூர் செய்திகள் | Dinamalar
போலீஸ் வாகனம் மோதி 2 பேர் காயம்; சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
Added : மே 24, 2022 | |
Advertisement
 


பண்ருட்டி : பண்ருட்டி அருகே, போலீஸ் ரோந்து வாகனம் விபத்து ஏற்படுத்தியதை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியல் நடத்தினர்.பண்ருட்டி அடுத்த கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி, 25. இவரும், இதே பகுதியை சேர்ந்த மதன்,17, என்பவரும் நேற்று காலை 8:00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் கொள்ளுக்காரன்குட்டை -மருங்கூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.



அப்போது, போலீஸ்காரர் பிரபு, 36, ஓட்டி வந்த நெடுஞ்சாலை ரோந்து வாகனம் பொலீரோ (டி.என்.31.ஜி 0956) வீரமணியின் மோட்டார் சைக்கிளில் மோதியது. தொடர்ந்து, மதில் சுவற்றில் மோதி நின்றது. இதில் பலத்த காயமடைந்த வீரமணி, மதன் இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின், மேல் சிகிச்சைக்காக கடலுார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருங்கூர், கீழக்குப்பம் மக்கள், விபத்து ஏற்படுத்திய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காலை 9:30 மணியளவில் வி.கே.டி. தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளுக்காரன்குட்டையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விபத்து ஏற்படுத்திய போலீஸ்காரர் பிரபு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து 11:00 மணிக்கு மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால், ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X