ஆலத்தூரில் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா
Added : மே 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


கள்ளக்குறிச்சி : ஆலத்துாரில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா நடந்தது.தமிழகம் முழுதும் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆலத்துார் ஊராட்சியில் திட்ட பயன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குனர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் மல்லிகா லோகநாதன் வரவேற்றார்.ஆலத்துார் ஊராட்சியில் நீர்வள ஆதாரத்தை பெருக்குதல். தரிசு நிலங்களை சாகுபடிக்குக் கொண்டு வருதல் உள்ளிட்ட திட்ட பயன்களுக்காக வேளாண் துறை சார்பில் 100 பேருக்கு தென்னங்கன்றுகள்,

தோட்டக்கலைத்துறை சார்பில் 50 பேருக்கு காய்கறி செடிகளுக்கான விதைகள் மற்றும் மண்புழு உரம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஆறுமுகம், துணை பி.டி.ஓ., பார்வதி, வேளாண் அலுவலர்கள் ஆனந்தன், சூரியபிரகாசம், பயிர் அறுவடை பரிசோதகர் கிரண்குமார், தோட்டக்கலைத்துறை அலுவலர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X