கலைவாணி, ஈ.வெ.ரா., மாநகராட்சி மேல்நிலை பள்ளி, மதுரை: ஒன்று, இரண்டு, ஐந்து மதிப்பெண் பகுதி வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தன. ஆசிரியர்கள் குறிப்பிட்ட முக்கிய வினாக்கள் 95 சதவீதம் கேட்கப்பட்டிருந்தது. வினாத்தாள் துவக்கம் முதல் எழுதி முடிக்கும் வரை சந்தோஷ மனநிலையே இருந்தது. எழுதிய வினாக்களை திருப்பி பார்ப்பதற்கான போதிய நேரமும் இருந்தது.முத்து சந்தியா, சி.எஸ்.ஆர்., நினைவு மேல்நிலை பள்ளி, திருநகர்: நேரடியாக பொதுத் தேர்வை சந்திந்த எங்களுக்கு ஆரம்ப தேர்வும் (தமிழ்), கடைசி தேர்வும் (உயிரியல்) எளிதாக அமைந்தது அளவில்லா சந்தோஷம். உயிரியலில் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் 'நீட்' தேர்வை வெல்வோம் என்ற மனநிலை ஏற்பட்டுள்ளது.ஸ்டீபன், மில்டன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, மேலுார்: உயிரி விலங்கியலில் இடம் பெற்ற எட்டு ஒரு மதிப்பெண் வினாக்களும் 'புக்பேக்'கில் இருந்து தான் கேட்கப்பட்டது. மூன்று மதிப்பெண் கட்டாய வினா சற்று குழப்பமாக கேட்கப்பட்டது. இருப்பினும் எழுதியுள்ளோம். ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்த பெரும்பாலான வினாக்கள் இடம் பெற்றது மகிழ்ச்சி.அருண்பாண்டியன், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, டி.வாடிப்பட்டி: உயிரி தாவரவியல் பகுதியில் இரண்டு, மூன்று மதிப்பெண் பகுதியில் இடம் பெற்ற வினாக்கள் மிக எளிமையாக இருந்தன. முழு மதிப்பெண் கிடைக்கும். உயிரி விலங்கியலில் 3 மதிப்பெண் வினா சில கடினமாக இருந்தன. ஆனால் பிற வினாக்களில் முழு மதிப்பெண் கிடைக்கும் நம்பிக்கை உள்ளது. தோல்வி குறையும்.