இத்துறையின் கீழ் மதுரை மாவட்டத்தில் 34 விடுதிகள் உள்ளன. காலை உணவாக இட்லி, பொங்கல், மதியம், இரவில் சாதமே வழங்கப்படுகிறது. மாதம் ஒரு புதன் மட்டன், மற்ற புதன்களில் சிக்கன் உண்டு.
ஜூன் 3 முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் முதல் விடுதி உணவு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி வியாழன் காலையில் இடியாப்பம், பட்டாணி குருமா அல்லது தேங்காய் பால். ஞாயிறு காலை தோசை அல்லது நவதானிய தோசை, சாம்பார், சட்னி வழங்கப்படும்.இரவு உணவாக திங்களன்று சப்பாத்தி, குருமா, செவ்வாய் இடியாப்பம் குருமா அல்லது சைவ கூட்டு, வியாழன் ஊத்தப்பம், சட்னி, சாம்பார், வெள்ளி கோதுமை தோசை, தக்காளி சட்னி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. உணவுக்காக தற்போது பள்ளி மாணவருக்கு மாதம் தலா ரூ. ஆயிரம், கல்லுாரி மாணவருக்கு ரூ.1100 வீதம் விடுதிக்கு வழங்கப்படுகிறது. 'மெனு' மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் இதனை உயர்த்த வேண்டும் என வார்டன்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.மதுரை, மே 24-
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் முதல் தோசை, ஊத்தப்பம், சப்பாத்தி, இடியாப்பம் வழங்கப்பட உள்ளன.