மதுரை, வேர்ல்டு கோஜு ரியு கராத்தே பள்ளி சார்பில் மதுரை அச்சம்பத்து பிளசிங் பள்ளியில் இரண்டு நாட்கள் கராத்தே குமித்தே, கொபுடோ நன்சக்கு பயிற்சி மற்றும் தேர்வு நடந்தது.ஆகஸ்டில் நடக்கவுள்ள பிரீமியர் லீக் கராத்தே போட்டிக்கான தேர்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் ஜெபமலர், கராத்தே பள்ளித் தலைவர் வித்யா சான்றிதழ் வழங்கினர். தொழில்நுட்ப இயக்குனர் வைரமணி, ஒருங்கிணைப்பாளர் ராஜா, பயிற்சியாளர்கள் ராஜா, சுதாகர், கார்த்திக் பாலா ஏற்பாடுகளை செய்தனர்.