சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே, பெண்ணை கத்தியால் குத்தி, கொலை செய்ய முயன்ற பூக்கடை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதை அறிந்த மளிகைக் கடை உரிமையாளர், இரண்டு மாதங்களுக்கு முன் அப்பெண்ணை வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு, மணிகண்டன், அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று, உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.அவர் மறுத்ததால், கத்தியால் குத்தி விட்டு தப்பி யோடி விட்டார். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, ரத்தவெள்ளத்தில் மிதந்தவரை மீட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, புதுச்சேரி 'ஜிப்மர்' மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.அப்பெண் அளித்த புகாரின் படி, சோழத்தரம் போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவான மணிகண்டனை நேற்று அதிகாலையில் கைது செய்தனர்.