தி.மு.க., மாநில விவசாய அணி துணைத்தலைவரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. ஓராண்டில் நுாற்றாண்டு சாதனைகளை நிகழ்த்தி, நல்லாட்சி தந்து சாதனைகளின் மறு உருவமாக முதல்வர் உள்ளார். மக்களை தேடி மருத்துவ திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டம் என, எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக தந்த முதல்வர், விவசாயிகளின் பாதுகாவலனாக விளங்கி வருகிறார். சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மே மாதத்தில் பாசனத்திற்காக, மேட்டூர் அணையை திறந்து வைக்க வரும் தமிழக முதல்வருக்கு தி.மு.க., விவசாய அணி சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.