மேற்கு மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவர் சீனிவாசன் தலைமையில், நிர்வாகிகள், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு: காடையாம்பட்டி அருகே, வடமனேரி ஏரிப்பகுதியில், நீர்மாரியம்மன் கோவில், பெரியாண்டிச்சியம்மன் கோவில், பெரமனார் கோவில் என, 25க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இது, நீர்நிலைக்கு இடையூறு இன்றி, நீர்தடம், பாசன பகுதியை மறித்து, கோவில் அமைவிடம் இல்லை. அனைத்து கோவில்களும், மேட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. அதை, சுற்றுப்புற கிராமத்தில் வசிக்கும், 3,000 குடும்பத்தாருக்கு பாத்தியப்பட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள், பல தலைமுறையாக, வழிப்பட்டு வருகின்றனர். அந்த கோவில்களை இடிக்க, தற்போது, பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். அதை தடுத்து, கோவிலை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும்.