வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு விபரம்:
சேலம், தாதகாப்பட்டியில் வசிக்கும், தனியார் பைனான்ஸ் நிறுவன அங்கீகரிக்கப்பட்ட முகவர் கார்த்திகேயன்,40. இவர், வாழப்பாடியில் கிளை அலுவலகம் திறந்து, வீட்டு உபயோக பொருட்கள் வாங்க, மேற்படி நிறுவனத்தில் கடன் பெற்று தருவதாக கூறினார். அதை நம்பி, எங்களுடைய ஆதார், ரேஷன்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வழங்கினோம். அதை வைத்து, எங்கள் பெயரில், தலா, 50 ஆயிரம் ரூபாய் முதல், 2 லட்ச ரூபாய் வரை, கடன் வாங்கி, தலைமறைவாகிவிட்டார். தற்போது, தவணை தொகை கேட்டு, மேற்படி நிறுவனம் கடிதம் அனுப்பி உள்ளது. இதுபற்றி, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளனர்.