பெட்ரோல் பங்க்கில் தரம் மற்றும் அளவு சரியாக வழங்கப்படுகிறதா என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சேலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மஞ்சள்நாதா தலைமையில், துணை ஆய்வாளர் குருபிரசாத் குழுவினர் நேற்று சேலம் ஐந்து ரோட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் ஆகியவை தரம் மற்றும் அளவுகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் நடத்தப்படும் வழக்கமான ஆய்வுதான் இது' என்றனர். ஆய்வின் போது இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன மண்டல துணை பொதுமேலாளர் அமலேஸ்வரராவ், முதன்மை மேலாளர் அய்யப்பதாஸ் உள்ளிட்ட முகவர்கள் இருந்தனர்.