'ஹெல்மெட்' கட்டாயம்: சாலைகளில் சோதனை தீவிரம்
Added : மே 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சென்னை : சென்னையில், இருசக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என்ற உத்தரவை, 100 சதவீதம் அமல்படுத்தும் முயற்சியில், போக்குவரத்து போலீசார் களம் இறங்கியுள்ளனர். அதன்படி, மாநகரின் அனைத்து பிரதான சாலைகளிலும், ஹெல்மெட் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிகழும் இருசக்கர வாகன விபத்துகளில், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியோர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்றோர் பலர் உயிரிழந்துள்ளனர்.இதனால், உயிரிழப்பை தடுக்க, இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்போர் கட்டாயம், ஹெல்மெட் அணிய வேண்டும் என, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மீறினால் வழக்குப்பதிந்து செய்து, அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

அதன்படி, சென்னை முழுவதும், 341க்கும் மேற்பட்ட இடங்களில், சிறப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் நடத்தப்பட்ட சோதனையில், 3,926 பேர் சிக்கினர். இவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்கிறது.

இதுகுறித்து, போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,'சென்னையில், ஹெல்மெட் கட்டாயம் என்பதை, 100 சதவீதம் அமல்படுத்தும் வகையில், சோதனையை இன்னும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை நடக்கும் இடங்களையும் அதிகப்படுத்த உள்ளோம்' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-மே-202207:01:52 IST Report Abuse
ராஜா ஒரு வட்டத்தின் ஒன்று விட்ட தம்பியாய் இருந்தால் கூட போதும், அபராதத்தில் இருந்து தப்பி விடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X