சென்னை : காஞ்சி மடத்தின் சார்பில் வாரந்தோறும் நடக்கும், காஷ்மீரின் பெருமைகளை விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 28ம் தேதி, 'காஷ்மீர் ஹிந்துக்களின் மரபு, பாரம்பரியம்' எனும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.
காஞ்சி மடத்தின் சார்பில் நடக்கும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி, ஒவ்வொரு சனிக்கிழமையும், மாத்யம தர்ம சமாஜத்தின், 'யு-டியூப்' சேனலில் ஒளிபரப்பாகிறது.வரும் 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு, 41வது விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 'காஷ்மீர் ஹிந்துக்களின் மரபு, பாரம்பரியம்' எனும் தலைப்பில் சிறந்த ஆன்மிக சொற்பொழிவாளரும், ஆய்வாளருமான சஞ்சய் ரெய்னா சொற்பொழிவு ஆற்றுகிறார்.
இந்நிகழ்ச்சிகளை நேரலையில் பார்க்க முடியாதவர்கள், மாத்யம தர்ம சமாஜத்தின், https://www.youtube.com /channel/UC---cWDkmwuK1iuL2nkED 5bcA இவற்றை, kamakoti.tv, Kanchi Kamakoti Facebook, Kanchi Kamakoti YouTube, KanchiMutt Twitter வாயிலாகவும் பார்க்க முடியும்.