ராமநாதபுரம், :ராமநாதபுரம் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளம், குழு போட்டிகள் நடந்தது.ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் போட்டிகளை மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு, வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் முன்னிலை வகித்தனர். சக்கரநாற்காலி, நீளம் தாண்டுதல், ஓட்டபந்தயம், குண்டுஎறிதல், இறகு பந்து, வாலிபால், கபடி, எறிபந்து ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. தடகளம், குழுபோட்டியில் முதலிடத்தை பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ராமநாதபுரம் ஆரோக்கிய மருத்துவமனை டாக்டர் பரணிகுமார், விஜயசாந்தி பவுண்டேசன் சார்பில், பரிசுகள், உணவு வழங்கப்பட்டது.