செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், செம்மஞ்சேரி அருகே, சாலையோரம் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்தி வந்த அமுதா, 65, நேற்று முன்தினம், மயங்கி விழுந்தார்.
பொதுமக்கள் அவரை மீட்டு, '108' ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தீவிர சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதற்கிடையே, மூதாட்டி அமுதா தவறவிட்ட பையை, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் எடுத்து வைத்திருந்தனர்.
அதில் 71 ஆயிரத்து 426 ரூபாய் இருந்தது.ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மணிகண்டன், ஓட்டுனர் அன்புராஜ் ஆகியோர், மூதாட்டியின் பணத்தை, அவரிடமே சென்று ஒப்படைத்தனர்.மூதாட்டியிடம் பணம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்களின் செயலை, பலரும் பாராட்டினர்.