'கலங்கடித்த' பத்தாம் வகுப்பு கணிதம்
Added : மே 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

ராமநாதபுரம் :பத்தாம் வகுப்பு கணிதம் தேர்வில் மாணவர்களை கலங்கடிக்கும் வகையில் பல வினாக்கள் இடம் பெற்றதால் அதிக மதிப்பெண் பெறுவது பெரும் சவாலாக இருக்கும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 'அதிக கடின வினாக்கள் இடம் பெற்றதை வினாத்தாள் தயாரிப்பு குழு கவனிக்க தவறியுள்ளது' என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:

----அதிக மதிப்பெண் சிரமம்
ஏ.பவானி, அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியபட்டினம்: ஐந்து மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தன. இரண்டு மதிப்பெண் வினாக்கள், எட்டு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. சராசரி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுப்பது சிரமம். மெல்ல கற்பவர்கள் தேர்ச்சி பெறலாம்.இரண்டு கட்டாய வினாக்கள் பாடத்திற்கு வெளியே கேட்கப்பட்டதால் சென்டம் எடுப்பது சிரமம்.---

சென்டம் எடுப்பது சிரமம்
பி.முத்துக்குமார், பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியபட்டினம்: ஒரு மதிப்பெண் 14 வினாக்களில் இரண்டு வினாக்கள் மட்டும் புத்தகத்திற்கு வெளியே கேட்கப்பட்டுள்ளது. இரண்டு மதிப்பெண் வினாக்களில் ஐந்து எளிதாக இருந்தன. ஐந்து மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது.எட்டு மதிப்பெண் வினாக்கள் எதிர்பார்த்த வினாக்களாக இருந்தன. முறையாக பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். இரண்டு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் கட்டாய வினாக்கள் பாடத்திற்கு வெளியே பாடம் தொடர்பாக சிந்திக்கு வகையில் கேட்கப்பட்டதால் சென்டம் எடுப்பது சிக்கல்.

கால அவகாசம் இல்லை
எஸ்.தேசிகன், செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் கேள்விகள் 14ல் 11 புக்பேக் கேள்விகள். 3 மட்டும் பாடத்திற்குள் இருந்து கேட்கப்பட்டன. கிராப் வரைதல் எளிமையாக இருந்தது. புக்பேக் கேள்விகள் அதிகம் இருந்ததால் எளிதில் தேர்ச்சி பெற முடியும்.அதே நேரம் அதிக மதிப்பெண் எடுப்பது சிரமம். கொரோனாவால் செப்., மாதத்திற்கு மேல்தான் பாடங்களை நடத்த முடிந்ததால் பாடங்களை புரிந்து படிக்க போதுமான கால அவகாசம் இல்லை.

சென்டம் எடுப்பது சிரமம்
எம்.அபிநயா, கணித ஆசிரியர், இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: கணித வினாக்கள் பாடப்புத்தகத்திலிருந்து நேரடியாக கேட்டுள்ளனர். ஆன் லைனில் பாடம் நடத்தினாலும், கணிதம் முழுப்பாடமும் நேரடிவகுப்பில் நடத்தி முடித்தோம். கடைசிநேர திருப்புதல் தேர்வுகளில் கவனம் செலுத்தியவர்கள் நல்ல மதிப்பெண் பெறலாம். மொத்தம் நுாறு மதிப்பெண்களில் ஒன்று, இரண்டு மதிப்பெண்கள் வினாக்கள் எளிமையாக உள்ளதால் 36 மதிப்பெண்களை அப்படியே அள்ளலாம். 5 மதிப்பெண் பிரிவில் கட்டாய வினாக்கள் சுற்றிவளைத்து கேட்டுள்ளனர். கிராப்ட், ஜாமண்ட்ரி எளிதாக உள்ளது. சுமாராக படிப்பவர்கள் 50 முதல் 70 மதிப்பெண்களும், நன்றாக படிக்கும் மாணவர்கள் 90 மதிப்பெண்கள், சிலர் நுாற்றுக்குநுாறு எடுக்க வாய்ப்புள்ளது.

புத்தக வினாக்கள் எளிமை
யு.நரேன் கார்த்திக் ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது 14க்கு 14 கிடைக்கும். 5 மதிப்பெண் வினா சில சுற்றி வளைத்து கேட்டிருந்தனர். மற்றப்படி அனைத்து வினாக்களும் புத்தகத்தில் இருந்து கேட்டுள்ளனர்.. ஜாமண்ட்ரி, கிராப்ட் கேள்விகள் எளிமையாக இருந்தன. அதிலும் 16 மதிப்பெண் முழுமையாக கிடைக்கும் . புத்தகத்திலிருந்து கேள்வி வந்துள்ளது, ஓர்அளவிற்கு படித்திருந்தால் 40 முதல் 60 மதிப்பெண் எடுக்கலாம். நன்றாக படித்தவர்கள் 80 முதல் 90 மதிப்பெண்கள் எடுக்கலாம்.

கட்டாய வினாக்கள் கடினம்
டி.கே. இந்துமாலினி, நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி ராமநாதபுரம்: கணிதம் பாடபுத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. 5 மதிப்பெண் நேரடியாக கேட்காமல் சுற்றிவளைத்து கேட்டதால் நீண்டநேரம் யோசித்து பதிலளிக்க வேண்டியிருந்தது. மூன்று திருப்புதல் தேர்வு நடத்தினர். ஆனால் அவற்றில் உள்ளபடி எதிர்பார்த்த வினாக்கள் கேட்கவில்லை. ஆங்கிலத்தை விட கணிதம் கடினமாக உள்ளது. சுமராக படிப்பவர்கள் 40 முதல் 70 மதிப்பெண்களும், நன்றாக படிப்பவர்கள் 90 மதிப்பெண் வரை பெறலாம்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X