கடும் வறட்சியால் பெரிய கண்மாய் வறண்டது : கோடை விவசாயம் பாதிப்பு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
கடும் வறட்சியால் பெரிய கண்மாய் வறண்டது : கோடை விவசாயம் பாதிப்பு
Added : மே 24, 2022 | |
Advertisement
 
Latest district News

ஆர்.எஸ்.மங்கலம் :ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில், வறட்சி காரணமாக, தண்ணீர் காலியாகி உள்ளதால், கோடை சாகுபடி செய்த விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெற்றது, ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். இத்தகைய கண்மாயில், கடந்த ஆண்டு டிசம்பரில், முழு கொள்ளளவான 6 அடியில், 5.5 அடி தண்ணீர் தேக்கபட்டது. கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீரை பயன்படுத்தி, விவசாயிகள் பருத்தி, உளுந்து, மிளகாய் சாகுபடி செய்திருந்தனர். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, கண்மாயில் வேகமாக தண்ணீர் குறைந்து, தற்போது முற்றிலும் காலியாகி, கண்மாய் பொட்டல் காடாக காட்சியளிப்பதால், கோடை சாகுபடி பயிர்களுக்கு, தண்ணீரின்றி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X