பாம்பன் பாலத்தை கடந்த கப்பல்கள் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
பாம்பன் பாலத்தை கடந்த கப்பல்கள்
Added : மே 24, 2022 | |
Advertisement
 
Latest district News

ராமேஸ்வரம், :சூறாவளியால் 12 நாட்களுக்கு பின் பாம்பன் ரயில் பாலத்தை இரு கப்பல்கள் கடந்து சென்னை சென்றது.தென்மேற்கு பருவக் காற்று சீசன் துவங்கியதால் ராமேஸ்வரம் பகுதியில் கடந்த 15 நாட்களாக சூறாவளி காற்று வீசியது. இதனால் பாம்பன், தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்ததால், மன்னார் வளைகுடா கடலில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.இந்நிலையில் மும்பையில் இருந்து புறப்பட்ட இழுவை, மிதவை கப்பல்கள் சென்னை செல்ல மே 12ல் பாம்பன் கடற்கரை வந்தது. இங்கு சூறாவளி காற்று வீசியதால் பாம்பன் ரயில் பாலத்தை திறக்க அனுமதி இல்லாததால், இரு கப்பலும் பாலத்தை கடந்து செல்ல தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று பாம்பனில் காற்றின் வேகம் தணிந்ததும், ரயில் துாக்கு பாலத்தை ஊழியர்கள் திறந்தனர். அப்போது 12 நாட்களாக காத்திருந்த இரு கப்பல்கள் பாலத்தை கடந்து சென்னை சென்றது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X