தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாணவ மாணவியர், கருத்தரங்குகளில் வழங்கப்பட்ட தகவல்கள், அரங்குகளில் வழங்கப்பட்ட உயர்கல்வி வழிகாட்டுதல்கள் குறித்து பாராட்டித்தள்ளினர். சரியான தருணத்தில் உயர்கல்வி குறித்து தகுந்த ஆலோசனை வழங்கி கண்ணை திறந்ததாக, பெற்றோர் நன்றி பெருக்குடன் தெரிவித்தனர்.
'ஒவ்வொரு தகவலும் பயன்'
சரியான தருணத்தில் உயர்கல்வி குறித்து தகுந்த ஆலோசனை வழங்கி கண்ணை திறந்துள்ளது 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி. கருத்தரங்கில் வழங்கப்பட்ட ஒவ்வொரு தகவலும் மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதுதவிர, கண்காட்சியில் கல்வி நிறுவனங்கள் குறித்து கிடைத்த தகவல்கள் மூலம் தெளிவு பிறந்துள்ளது. அனைத்து தகவல்களும் அற்புதம்.-பி.சித்ரபிரியா, அவிநாசி'தெளிவாக இருக்கிறோம்'
கருத்தரங்கு கண்காட்சிக்கு காலையிலேயே வந்து விட்டோம். உயர் கல்வி குறித்து கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம் என்பது குறித்து பல சந்தேகங்கள் இருந்தன. அவை அனைத்தும் தற்போது நீங்கியுள்ளது. நல்லவேளை இங்கு வந்தோம்.-ஜே.மதுமிதா, ராமநாதபுரம்'அரங்குகள் தகவல் சுரங்கம்'
உயர் கல்வியில் எந்த கல்லுாரியில் சேர்வது என்ற சந்தேகம் இருந்தது. தற்போது அது நீங்கியுள்ளது. இங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளுக்கு சென்று பார்த்த போது அங்கு வழங்கப்பட்ட தகவல்கள் மூலம் அனைத்து சந்தேகங்களும் நிவர்த்தியானது. கருத்தரங்கில் வழங்கப்பட்ட தகவல்கள், அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.- எஸ்.அஷ்வத், சின்னியம்பாளையம்'சந்தேகங்கள் நீங்கி விட்டன'
அனைத்து துறைகளிலும் உள்ள வாய்ப்புகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. எதிர்காலம் குறித்து இருந்த அனைத்து சந்தேகங்களும் நீங்கியது. அத்துடன் எந்தக் கல்லுாரியில் சேர்ந்தால் சிறந்த கல்வி கிடைக்கும் என்பதும் தெரிந்தது. கல்வியுடன் வளர்த்துக் கொள்ள வேண்டிய கூடுதல் திறன்கள் குறித்தும் அறிந்து கொள்ள முடிந்தது.--டி.ஜி.ஜீவன் பிரசாத், இருகூர்.