'நசுங்கியது' தக்காளி விலை; ஒரே நாளில் ரூ.250 சரிவு
Added : மே 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தக்காளி வரத்து அதிகரித்ததால், ஒரே நாளில், 250 ரூபாய் விலை சரிந்தது.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவை முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள், தங்களின் விளைபொருட்களை தொண்டாமுத்தூர் மற்றும் பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், கடந்த ஒரு மாதமாக தக்காளி வரத்து குறைந்ததால், ஒரு டிப்பர் தக்காளி, 180 ரூபாயில் இருந்து, மளமளவென உயர்ந்து, 1,000 ரூபாய்க்கு மேல் விற்பனையானது. பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்றுமுன்தினம், 14 கிலோ எடையுள்ள ஒரு டிப்பர் தக்காளி, 1,250 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று உள்ளூர் மற்றும் வெளியூர் தக்காளி வரத்து அதிகரித்ததால், ஒரு டிப்பர் முதல்தர தக்காளி, 1,000 ரூபாய்க்கும், இரண்டாம், மூன்றாம் தர தக்காளி, 650 முதல் விற்பனையானது. வரத்து அதிகரித்துள்ளதால், ஒரே நாளில், டிப்பருக்கு, 250 ரூபாய் விலை சரிந்தது. இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து விலை சரிவடையும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.


 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X