பாலியல் வழக்கில் ஆஜராகாதலாரி டிரைவருக்கு பிடிவாரன்ட்  | சிவகங்கை செய்திகள் | Dinamalar
பாலியல் வழக்கில் ஆஜராகாதலாரி டிரைவருக்கு பிடிவாரன்ட் 
Added : மே 25, 2022 | |
Advertisement
 

சிவகங்கை, :காரைக்குடியில் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத டிரைவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து சிவகங்கை மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டார்.காரைக்குடி அருகே கல்லுப்பட்டி பள்ளித்தெரு லாரி டிரைவர் விஜயகுமார் 32. இவர் 2014ம் ஆண்டு மே 24 ம் தேதி வீட்டில் தனியாக துாங்கிக்கொண்டிருந்த 80 வயது மூதாட்டியின் வாயில் துணியை கட்டி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். காரைக்குடி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவரை கைது செய்தனர். வழக்கின் மீதான விசாரணை சிவகங்கை மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. நேற்று இந்த வழக்கின் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட லாரி டிரைவர் ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராகாத டிரைவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து சிவகங்கை மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X