திருப்புவனம், :கீழடியில் அகழாய்வு குழிகள் சேதமடைந்து வருவதால் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழக தொல்லியில் துறை சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடங்களான கீழடி, அகரம், கொந்தகை ஆகிய தளங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு கீழடியில் மட்டும் தற்போது திறந்த வெளி அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. கொந்தகை, அகரம் இரு தளங்களிலும் குழிகள் அனைத்தும் சேதமடைந்து மண் சரிந்து மூடி வருகிறது.அகரத்தில் கெண்டி மூக்கு பானை, உறைகிணறுகள் அனைத்தும் சேதமடைந்து வருகின்றன. சிறு சிறு சுடுமண் பாத்திரங்கள் அனைத்தும் சேதமடைந்து வருவதால் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே சேதமடைந்த அகழாய்வு குழிகளை சரி செய்து பார்வையாளர்களை அனுமதிக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.