சிவகங்கை, :சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மே 27ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்களை தேர்வு செய்யவுள்ளனர். வேலை தேடுவோர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். தமிழக அரசின் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்து, தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருந்தால் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் தங்களது கல்வி சான்று, ரேஷன் கார்டு, வேலை வாய்ப்பு அடையாள அட்டை , ஆதார் அட்டையுடன் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். இதில் பணி வாய்ப்பு பெறுபவர்களுக்கு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.