எம்.ஹரிஹரன், ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி, சிவகங்கை: எளிமையாக தான் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அனைத்து வினாக்களும் பயிற்சி பெற்ற வினாக்களில் இருந்தே கேட்கப்பட்டிருந்ததால் எளிதில் பதில் எழுதும் வகையில் இருந்தது. கட்டாய வினாக்களில்மிக, மிக எளிமையான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. அனைத்து வினாக்களும் புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டிருந்தது. நான் அனைத்தையும் படித்திருந்ததால் எளிதாகபதில் அளித்துள்ளேன். சென்டம் எடுக்க முடியும்.ஆர்.நரேஷ்குமார், மன்னர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை: கணித தேர்வு வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்தது. வினாக்கள் கிரியேட்டிவாக இருந்ததால் மாணவர்கள்சிந்தித்து எழுதும் விதமாக இருந்தது. சிந்தித்து எழுதுவதும் மிக எளிமையாக இருந்தது. பயிற்சி பெற்ற வினாக்களில் இருந்தே வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. கொரோனா பாதிப்பு என்பதால் வினாக்கள் கடுமையாக இல்லாமல் எளிதில் பதிலளிக்கும் விதமாக இருந்தது.பீ.அக் ஷயா, சாம்பவிகா மேல்நிலை பள்ளி, சிவகங்கை: கணிதத்தில் வினாக்கள் அனைத்தும் புத்தக பயிற்சி வினாக்கள் மற்றும் புத்தகத்தில் இருந்தே கேட்டிருந்தனர். மாணவர்களின் திறனை அறியும் வண்ணம், 2 மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் சில 'கிரியேட்டிவ்வாக' கேட்கப்பட்டன. சாதாரண மாணவர்கள் தேர்ச்சி பெறலாம். கணிதத்தில் சென்டம் எடுக்க கணிதத்தை அடிக்கடி போட்டு பார்த்து வினாவை புரிந்து படித்து தெளிவாக விடை அளிக்கும் சிலரே 'சென்டம்' பெற முடியும். பெரிய அளவில் கடினமான தேர்வாக கணிதம் இல்லை.பீ.மகேஷ்வரி, புனித ஜஸ்டின் மகளிர் மேல்நிலை பள்ளி, சிவகங்கை: ஒரு மதிப்பெண் வினாக்கள் 14 ல் 3 வினாக்கள் சற்று சிந்தித்து எழுதும் விதத்தில் கேட்டுள்ளனர். திருப்புதல் தேர்வுகளில் நன்கு கணக்குகளை போட்டுபார்த்து படித்திருந்தால் எளிமை தான். புத்தகம், புத்தக பயிற்சி வினாக்களில் இருந்தும் வினாக்கள் வந்தன. புத்தகத்தின் உட்பகுதியில் இருந்தும் நுணுக்கமாக சில வினாக்கள் கேட்டிருந்தனர். அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறலாம். ஆனால் சிலரே 'சென்டம்' எடுக்க முடியும்.கே.கார்த்திக், கணித ஆசிரியர் மன்னர் மேல்நிலைப்பள்ளி: கணித வினாத்தாள் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். சராசரி மாணவர்கள் கூட தேர்ச்சி பெறும் வகையில் வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. ஒரு மார்க்14 வினாக்களில் 11 வினாக்கள் நேரடி வினாக்களாக இடம் பெற்றிருந்தது. 3 வினாக்கள் கிரியேட்டிவாக இருந்தது. செய்முறை வடிவியலில் வரைபடம், கிராப்ட் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் பதில் அளித்திருப்பார்கள். 5 மார்க் வினாக்களில் 4 வினாக்கள் பதிலளிக்கும் விதமாக இருந்தது. அதிக மாணவர்கள் சென்டம் எடுக்க வாய்ப்புள்ளது.டீ.ஜாக்குலின், ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் மேல்நிலைபள்ளி, டி.புதுார், சிவகங்கை: கணித தேர்வு முற்றிலும் மாணவர்கள் சிந்தித்து, தெளிவாக எழுதும் நிலையில் வினாக்கள் கேட்டிருந்தனர். 2 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினாக்கள் சில சற்று கடினமாக இருந்தது. மற்றபடி பெரிய அளவில் கணிதபாடம் கஷ்டத்தை தரவில்லை. முழுமையாக படித்து அடிக்கடி வீடு, பள்ளியில் கணிதத்தை போட்டு பார்த்த மாணவர்களுக்கு இத்தேர்வு 'ஈஸி' தான், என்றனர்.