மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் முகாம் : இன்று திருப்புத்தூரில் துவக்கம் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் முகாம் : இன்று திருப்புத்தூரில் துவக்கம்
Added : மே 25, 2022 | |
Advertisement
 


சிவகங்கை, :திருப்புத்துாரில் இன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் நடக்கிறது.இன்று காலை 10:00 மணிக்கு திருப்புத்துார் அழகப்பா பாக்கியம் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் முகாம் மற்றும் கவுன்சிலிங் முறையில் மருத்துவ முகாம் நடைபெறும். மே 27 அன்று காலை 10:00 மணிக்கு சிவகங்கை கோட்டாட்சியர் முத்துகழுவன் தலைமையில் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறும். இம்முகாம்களில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கு அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே தேசிய அடையாள அட்டைபெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு நாடு முழுவதும் ஒரே வடிவிலான தனித்துவ அடையாள அட்டைக்கு சிறப்பு ஆசிரியர்களை கொண்டு முகாம் நடக்கும் இடத்தில் பதிவு செய்யப்படும். இது தவிர அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கான விண்ணப்பமும் இம்முகாமில் பெறப்படும் என தெரிவித்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X