திருப்புத்துார், மே 25--
திருப்புத்துார் தெற்கு ரதவீதியில் புதிய மின்மாற்றியை இயக்கி வைத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், இங்கு தேரோடும் வீதிகளில் ரூ 8.9 லட்சத்தில் நிலத்தடியில் மின் கேபிள் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக' தெரிவித்தார்.திருப்புத்துார் நகரில் அதிக இணைப்பு காரணமாக குறைந்த மின் அழுத்தம் காணப்படுகிறது.அதிக இணைப்பு மற்றும் வணிக வளாக இணைப்புக்கள் கொண்ட அஞ்சலகவீதி மின்மாற்றியில் இருந்து 300 இணைப்புகள் தனியாக பிரித்து ரூ 7 லட்சம் மதிப்பில் 280 கேவி மின்திறன் கொண்ட மின்மாற்றியில் இணைக்க திட்டமிடப்பட்டு.தெற்கு ரத வீதியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில், ' திருப்புத்துாரில் குறை மற்றும் மிகை மின்அழுத்தம் உள்ள பகுதிகளில் மின்மாற்றிகள் தரம் உயர்த்தப்பட்டும் , தேவையான இடங்களில் புதிய மின்மாற்றி அமைக்கப்படுகிறது. மின் கோட்ட அளவில் ரூ 88.3 லட்ச மதிப்பில் 22 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளது. கூடுதலாகரூ; 22.78 லட்சத்தில் 4 மின்மாற்றிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தேரோடும் வீதியில் ரூ 8.9 லட்சம் மதிப்பில் நிலத்தடியில் மின் கேபிள் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார். செயற்பொறியாளர் செல்லத்துரை மின்மாற்றி குறித்து விளக்கினார்.