தினமலர் செய்தி எதிரொலி வணிக வளாகம் பளிச் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
தினமலர் செய்தி எதிரொலி வணிக வளாகம் பளிச்
Added : மே 25, 2022 | |
Advertisement
 
Latest district News



சிவகாசி, :
தினமலர் செய்தி எதிரொலியாக சிவன் கோயில் அருகே உள்ள வணிக வளாகம் சுத்தம் செய்யப்பட்டது.சிவகாசி சிவன் கோயில் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. குடிமகன்கள் மது அருந்தி வணிக வளாகத்தை பாராக மாற்றினர். இதனால் வளாகம் முழுவதும் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப் போன்ற குப்பைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. நடப்பதற்கே இடம் இல்லாத அளவிற்கு மாறியது. பாட்டில்கள் அங்கேயே உடைக்கப்பட்டதால் அவ்வழியே நடக்கும் பொதுமக்கள் சிரமப்பட்டனர். சுகாதாரக் கேடும் ஏற்பட்டது. இதுகுறித்து 'தினமலர் நாளிதழ்' சூப்பர் ரிப்போர்ட்டர் பகுதியில் செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப், குப்பைகள் அகற்றப்பட்டது. ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டு, வணிக வளாகம் பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X